வேட்டையன் திரைப்படத்தில் வரும் காட்சியை நீக்க வேண்டும்; பி.எம்.டி. இயக்கம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் புகார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், திரைப்பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் ஒரு காட்சியில் கோவில்பட்டி காந்திநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்த தவறான காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
ஏற்கனவே அரசு பள்ளிகளில் சேர்க்கை சதவீதம் குறைந்து வரும் சூழலில் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை மேலும் குறைக்கும் விதமாகவும், அங்கு பயிலும் மாணவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் உள்ளது. எனவே, வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இயக்குநர் ஞானவேல் மீது சட்டப்படியான நடிவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
No comments