Breaking News

வேட்டையன் திரைப்படம் கோவில்பட்டி திரையரங்குகளில் இன்று வெளியானது; ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


ஜெய் பீம்' படத்தை இயக்கிய த.செ. ஞானவேலின் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது, இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தவிர, ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

வேட்டையன் திரைப்படம் ரஜினியின் 170-வது திரைப்படம். இதற்கு முன்பாக அந்தா கானூன், கிராஃப்தார், ஹம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்த ரஜினியும் அமிதாப் பச்சனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று திரைப்படம் வெளியான நிலையில் கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் 

No comments

Copying is disabled on this page!