சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென போலிசாருக்கு எஸ்பி வீர வல்லவன் அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பொதுமக்களுடனான நல்லறவு கூட்டம் இன்று நடைபெற்றது.
சீனியர் எஸ்.பி நாரா சைத்தன்யா,எஸ்பி லட்சுமி தலைமையில் இன்ஸ்பெக்டர் தனசேகர், சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் முத்தியால்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரசியல் கட்சியினர், வியாபாரிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு புகார்களை பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பேசிய சீனியர் எஸ்பி நாரா சைத்தன்யா, பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தயக்கமின்றி காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
No comments