ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
டிஜிட்டல் கிராப் சர்வே தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தாத வருவாய் துறையை கண்டித்து தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டிஜிட்டல் கிராப் சர்வே தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தாத வருவாய்துறையை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் திருமலை சங்கு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் குபேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் டிஜிட்டல் கிராப் சர்வே (Digital Crop Survey) பணி தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களிடம் கூட்டமைப்பு சார்பாக நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் எதையும் நடைமுறை படுத்தாத வருவாய் துறையை கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலருக்கு பணி பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம நிர்வாக அலுவலகங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதை புதுப்பித்து கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments