Breaking News

திருநெல்வேலியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வன உயிரினங்கள் என்கிற தலைப்பில் ஓவிய போட்டி நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், தமிழ் நாடு அரசு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு கோட்டம் மற்றும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு இணைந்து வன உயிரின வாரம் 2024 – ஓவியப் போட்டி; ஒன்றை பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் 76 நபர்களும் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 37 அவர்களும் கலந்து கொண்டனர். இரு பிரிவுகளிலும் வெற்றி பெறும் முதல் 5 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களுடன் களக்காடு தலையணைப் பகுதியில் சூழல் பயணம் ஒன்று வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 06.10.2024 அன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியினை மாவட்ட அறிவியல் அலுவலர் திரு எஸ் எம் குமார் அவர்கள் தொடங்கி வைத்தார் மற்றும் ஏட்ரீ தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன பாதுகாவலர்கள் மற்றும் மாவட்ட அறிவியல் மைய கல்வி அலுவலர் ப மாரி லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!