திருப்பத்தூரில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.
திருப்பத்தூரில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து, வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், திமுகவின் கந்தலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே.முருகேசன், கந்தலி மத்திய ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன், கந்தலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அ.மோகன்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.தசரதன், நகர மன்ற துணைத்தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
No comments