Breaking News

புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிா்வாகிகளை நியமிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

 



புதுச்சேரியில் கடந்த 2011-ஆம் ஆண்டில் அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் கட்சி அமைக்கப்பட்டது. அதன் நிறுவனத் தலைவராக தற்போதைய புதுவை முதல்வா் என்.ரங்கசாமி உள்ளாா். இந்நிலையில் கட்சிக்கான முக்கிய நிா்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்து வந்தனா்.


கடந்த மக்களவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள் ரீதியில் பிரசாரம் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், புதுவை மாநில என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



கட்சியின் மாநில செயலா் என்.எஸ்.ஜெ. ஜெயபால் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா்கள் ஜெயக்குமாா், லட்சுமி நாராயணன், பேரவைத் துணை தலைவா் ராஜவேலு, எம்எல்ஏ.க்கள் கேஎஸ்பிரமேஷ், பாஸ்கா் என்கிற தட்சணாமூர்த்தி லட்சுமிகாந்தன் மற்றும் மூத்த தலைவா்கள் பக்தவத்சலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


கட்சியை பலப்படுத்தவும், தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளை நியமிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதுவையில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கட்சியின் பொறுப்பாளா்கள் கூட்டத்தை கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.

No comments

Copying is disabled on this page!