ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் தேசத்தந்தை காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழா மற்றும் காமராஜர் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற மாபெரும் ஓவியப் போட்டி.!
ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில், மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 120வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 49 வது நினைவு தினத்தையொட்டி காந்திய சிந்தனை,மத நல்லிணக்கம், அஹிம்சை,அமைதி,அன்பு போன்றவற்றை மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா வண்ண அருவி கலைக்கூடத்தில் நடைபெற்றது. அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தி, காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு சேர்மனுமான ஆர்.இ சேகர் தலைமையில், பேரவை துணைத்தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான திருவேங்கடம் முன்னிலையில் ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
முன்னதாக ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ சேகர் தலைமையில், மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜ் ஆகியோர் திருவுருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில்,தயாளன்,பிரபு,மோகன் மற்றும் வண்ண அருவி ஓவிய கலைக்கூடத்தில் நிறுவனர் ராஜேஷ், மரி பிளோமினா, ஓவியர்கள் சக்திதாசன்,ராம்குமார் மற்றும் பெற்றோர்கள் உட்பட மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments