Breaking News

தூத்துக்குடியில் தேமுதிக சார்பில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!


தூத்துக்குடியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளையொட்டி தேமுதிக பொதுச்செயலளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் மாநகர் மாவட்ட தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் அமைந்துள்ள மகாத்மாகாந்தியின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தேமுதிக ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், மந்திரமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் அலெக்ஸாண்டர், வல்லரசுதுரை, மாலதி, ராஜபொம்மு மோகன்தாஸ், காந்தி செல்வம், ஜெயசிங், பகுதிச் செயலாளர்கள் நாராயணமூர்த்தி, ஸ்மார்ட் சுரேஷ், அரசமுத்து, சுரேஷ், சார்பு அணி நிர்வாகிகள் கந்தன், அக்பர், சக்திவேல், மணிகண்டன், ஒன்றிய பகுதி நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ஜெயராமன், சரவணன், ஆனந்த கிருஷ்ணன், இருளப்பசாமி, முத்துவேல், சுப்புராஜ், நயினார், கருப்பசாமி, செல்வம், கார்த்திக், ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!