Breaking News

உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருநாவலூர் ஒன்றியம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் உளுந்தூர்பேட்டை நகரம் ஆகிய பகுதியிலுள்ள ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர் ஊராட்சி செயலாளர் வார்டு செயலாளர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி பற்றியும் மற்றும் கட்சி குறை, நிறைகளை பற்றி உரையாடல் நடைபெற்றது பின்னர் கட்சி வளர்ச்சி அடையவும் மற்றும் ஆளுகின்ற திமுக அரசையும் அந்த அரசு திறன் இல்லாத அரசு என்றும் அந்த அரசின் குறைகளை மற்றும் மின் கட்டண உயர்வு சொத்து வரி மற்றும் பல வாக்குறுதிகளை தேர்தல் கொடுத்துவிட்டு தற்போது செயல்படாமல் இருக்கின்ற திமுக அரசு செயல்பாடு உள்ளதை எடுத்துரைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது பின்னர் அதிமுக சார்பில் தொகுதி பொறுப்பாளராக உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு வந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார் சிறப்புரை ஆற்றினார் அப்போது அதிமுக கட்சி தோன்றி சுமாரா 53 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆகையால் தமிழகம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களில் வீட்டில் கொடிகளை ஏற்ற வேண்டும் என்றும் கொடி கம்பங்கள் அனைத்திலும் கட்சி கொடியை ஏற்ற வேண்டும் என்றும் இன்னும் வருகின்ற ஆண்டுகளில் கட்சி பொன்விழா கண்டுள்ளது அதுபோல் இன்னும் நூற்றாண்டுகளுக்கு இந்த கட்சி மேலும் மேலும் வளர்ந்து நூற்றாண்டு விழாவும் காண நாம் பாடுபட வேண்டும் என்றும் மீண்டும் அண்ணா திமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணியாற்றி அதிமுக கட்சி வலுப்படுத்தி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை காண வேண்டுமென்று சிறப்புரை ஆற்றினார் பின்னர் சிறப்புரை ஆற்றிய கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதி மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பெற்று ஒரு சிறிதளவு வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றியை நழுவ விட்டார்கள் ஆகையால் நம்முடைய கட்சி பொறுப்பாளர்கள் பாகுபாடு இன்றி ஒருமனதாக ஒன்றிணைந்து செயல்பட்டால் மாபெரும் வெற்றியை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெற முடியும் என்று சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர் அணி மாவட்ட செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர் பாக்யராஜ் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!