காரைக்கால் ஜிப்மர் அருகே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
காரைக்கால் மாவட்டம் நகராட்சி சந்தை திடலில் ஞாயிற்றுக் கிழமைகளில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது இங்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காய்கறி பழங்கள் மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இங்கிருந்து காரைக்காலில் உள்ள ஹோட்டல்கள் காய்கறி கடைகளுக்கு காய்கறிகள் இலவச டோர் டெலிவரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று வார சந்தையில் காய்கறிகளை கொள்முதல் செய்து காரைக்காலில் உள்ள சில கடைகளுக்கு டெலிவரி செய்ய சரக்கு வாகனம் ஒன்றில் காய்களை ஏற்றி காரைக்கால் மேற்கு புறவழிச் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது காரைக்கால் ஜிப்மர் அருகே வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனத்தில் வந்த ஓட்டுநர் உள்ளிட்ட மேலும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், காலிஃப்ளவர், குடைமிளகாய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் சாலையில் சிதறி கிடந்தது. இதனுடைய அந்த வழியாக வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சரக்கு வாகனத்தை கயிறு கட்டி இழுத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். விபத்து காரணமாக கும்பகோணம் காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து காரைக்கால் நகர போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில் 300 கிலோ தக்காளி உபயோகப்படுத்த முடியாமல் போனதில் 25 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காய்கறி வியாபாரி வேதனை தெரிவித்தார்.
No comments