நந்தியம்பாக்கம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கு சிஎஸ்ஆர் நிதி மூலம் ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments