புதுச்சேரியில் பிரபல வணிக வளாகத்தில் வெடிகுண்டு சோதனை..
வணிக வளாகத்தில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது..! |
புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள பிராவிடன்ஸ் வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் சம்மந்தப்பட்ட வணிக வளாகத்துக்கு விரைந்து வந்து ஓரிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அதே நேரத்தில் யாரும் பயப்பட வேண்டாம் எனக்கூறி ஊழியர்கள், பொதுமக்களை பாதுக்காப்பாக வெளியேற்றினார். மேலும் காவல்துறை நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்துக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர். சைரன் ஒலி ஒலிக்கப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் திடீர் சைரன் சத்தத்தால் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து இது ஒத்திகை நிகழ்ச்சிதான் பயப்பட வேண்டாம் வணிகவளாக நிர்வாகம் தரப்பில் மைக்கில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து முதுநிலை காவல்கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, காவல் கண்காணிப்பாளர் ரகுநாயகம் தலமையிலான போலீசார் வணிக வளாகம் உள்ளே குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு இருப்பதாக சந்தேகப்பட்ட பகுதியை கயிறு கட்டி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர், தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் தோனி மற்றும் ராம் அங்குள்ள துணிக்கடையின் உள்ளே மோப்பம் பிடித்தபடி சென்று, ஆடைகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் பாம்மை கண்டுபிடித்தது. தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர், கவச உடை அணிந்தபடி உள்ளே சென்று, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு அடங்கிய சூட்கேசை மெல்ல வெளியே கொண்டு வந்து, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு, உபகரணத்தில் வைத்து வாகனத்தில் வைத்து பாதுகாப்பாக எடுத்து சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments