Breaking News

புதுச்சேரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் வழக்கம் போல் தனது பாணியில் ஐயர் இருந்தும் தனது கையால் தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார்.

 



புதுச்சேரியில் ஆயுத பூஜை விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சட்டப் பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சரஸ்வதியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து பின்னர் ஆராதனை நடைபெற்றது.


கடவுள் மீது தீவிர பற்றுக் கொண்டுள்ள முதலமைச்சர் ரங்கசாமி அவரது வீட்டிலும் சரி, அவரது அலுவலகத்திலும் சரி, அவர் தொகுதியில் பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தாலும் புரோகிதர்கள் இருந்தாலும் தனது கையால் கற்பூரம் ஏற்றி தீபாரதனை காண்பித்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளார்.அதே பாணியில் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை விழாவின் போது புரோகிதர்கள் மந்திரம் ஓதினாலும் முதலமைச்சர் ரங்கசாமி சுவாமி படத்திற்கு தனது கையால் மலர் தூவியும், ஊதுவர்த்தி ஏற்றியும், கற்பூரம் ஏற்றி தீபாராதனை காண்பித்தார்.


இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்பி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!