மின்துறை தனியார் மய முடிவை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பினர் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைப்பின் மாநில தலைவி ரைஹானா பேகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் என 100கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மின் துறையை தனியார் மையமாக்கும் முடிவை கைவிட வேண்டும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கையில் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழப்பினர்.
No comments