புதுச்சேரி மாநில அண்ணா தொழிற்சங்க ஆட்டோ சங்கம் சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டி ஆயுத பூஜை விழாவை சிறப்பாக கொண்டாடினார்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநில அண்ணா தொழிற்சங்க ஆட்டோ சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா ரயில் நிலையம் எதிரே சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பூஜை செய்து ஆயுத பூஜை விழாவை கொண்டாடினார். அப்போது திடீரென ஆட்டோவில் ஏறி அமர்ந்து சிறிது தூரம் தானே ஆட்டோவை ஓட்டி சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, அதிமுக அவைத்தலைவர் அன்பானந்தம், அதிமுக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க ஆட்டோ சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments