ஸ்ரீமுஷ்ணத்தில் அ தி மு க சார்பாக நகர செயலாளர் கேசவன் தலைமையில்மனித சங்கிலி போராட்டம் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் நகர செயலாளர் கேசவன் தலைமையில் அதிமுக சார்பாக திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் பூமாலை சண்முகம் எம் ஆர் கே கூட்டுறவு சங்க தலைவர் திருஞானம் மாவட்ட கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பம் மணிகண்டன் மற்றும் நகர பொறுப்பாளர்கள் கிளைச் செயலாளர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திமுக அரசை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மின் கட்டணம் உயர்வு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழிலாளர்கள் முடங்கி போய் உள்ளனர் சொத்து வரி வீட்டு வரி குடிநீர் வழி ஏறி போச்சு ஆண்டுதோறும் ஆறு சதவீத சொத்து வரி உயர்ந்துள்ளது பால் விலை உயர்வு நாள் ஏழைகள் மிகவும் பாதிப்படைந்தவர்கள் பத்திரப்பதிவு கட்டணத்தால் நடுத்தர மக்களின் கனவெல்லாம் பாழா போச்சு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழைகளின் வயிறு எரியுது கடுகு எண்ணெய் பருப்பு விலை காய்கறி பழங்கள் விலை கேட்டாலே மக்கள் கொலை நடுங்கிப் போகிறார்கள் வாக்களித்தபடி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்யப்படவில்லை சட்டம் ஒழுங்கு சீர்கேடு தமிழ்நாடு முழுவதும் கெட்டுப் போய்விட்டது தெருக்கள்தோறும் கஞ்சா வீதிகள் தோறும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் இந்த ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது குற்றச்செயலை தடுக்க முடியாத திமுக ஆட்சியை வருகின்ற 2026 ஆம் ஆண்டு வீழ்த்த வேண்டும் என கட்சி பிரமுகர்கள் கோஷமிட்டனர்.
No comments