Breaking News

ஈரோட்டில் வலி நிவாரண மாத்திரையை போதை மாத்திரையாக சிரஞ்சுகள் மூலம் பயன்படுத்தி வந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர் ;

ஈரோடு நாராயண வலசு, இந்திரா நகர்,  பெரிய சேமூர் மற்றும்  கல்லன்கரடு ஆகிய பகுதிகளில் இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறி வைத்து வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வருவதாக வடக்கு காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் அவர்கள்,  நவீன்குமார்(21), கௌதம்(22), சிதம்பரம்(27), பாஸ்கர்(28), ஹர்னீஸ்(22), விக்னேஷ் (27) இந்துமதி(20), சந்தியா(23) மற்றும் சமீம்பானு(20) என்பதும், அவர்கள் உடல் வலிக்காக பயன்படுத்தக் கூடிய  மாத்திரையை போதைக்காக சிரஞ்சுகள் மூலம் பயன்படுத்தி வந்ததோடு, அதனை மற்ற இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்த அவர்கள் 9 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த  40 வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் 20 ஊசிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைகாவலுக்கு அனுப்பி வைத்த போலீசார்,  இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

No comments

Copying is disabled on this page!