யாதவர் மகாசபை மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் பொட்டல் துரை இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.
தமிழ்நாடு யாதவர் மகாசபை மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் பொட்டல் துரை இல்ல திருமண விழா நெல்லை கேடிசி நகரில் உள்ள மகராசி திருமண மஹாலில் நடைபெற்று வருகிறது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எதிர் கட்சி தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்து அங்கிருந்து தரை மார்க்கமாக வந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர், தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments