தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளர்கள்- வாசகர்கள் இயக்க முப்பெரும் விழா.
விழாவில், அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை, போதை நோய் நலப்பணிக்குழு ஜெயந்தன் அடிகளார் ஆசியுரை வழங்கினார். நெய்தல் எழுத்தாளர்கள்& வாசகர்கள் இயக்கத் தலைவர் கலாபன் வாஸ் தலைமை வகித்தார். சீ சைட் ரோட்டரியின் செயலர் யோகேஷ், நெய்தல் எழுத்தாளர்கள்- வாசகர்கள் இயக்க செயலர் அந்தோணி அம்புரோஸ் கரிகாலன், தேர்மாறன் கல்லறை மீட்புக்குழுவின் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை பரவர் நலப் பேரவை தலைவர் சகாயராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உயர்கல்வி பயிலும் 15 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார். 15 மாணவர்களுக்கு அந்தோணிசாமி சீருடைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பொனோ ரோச், ஜோ வில்லவராயர், மைக்கேல் பர்னாண்டோ, குணபாலன் ஆகியோருக்கு நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் பாண்டியபதி மன்னர் தேர்மாறன் புகழை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உதவிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் முதன்மைச் செய்தியாளர் காட்சன் ஒயிஸ்லி தாஸ் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் கலாபன் வாஸ் எழுதிய வைரலாகும் வைரங்கள் நூலை பாத்திமாநகர் ஊர்க்கமிட்டியின் நிர்வாகச் செயலாளர் ஆரோக்கியசாமி வெளியிட, சீ சைடு ரோட்டரியின் உதவி ஆளுநர் ஆண்டனி பிரான்சிஸ் சுரேஷ் பெற்றுக்கொண்டார். ஆசிரியர் பிரபாவதி நூலை அறிமுகம் செய்து பேசினார்.
பிரான்சிஸ் சேவியர் சே.ச. எழுதிய முடியும் என்றால் விடியும் என்ற நூலை கோரமண்டல் சமூக நற்பணி மன்றத் தலைவர் பிரின்ஸ்டன் பர்னாண்டோ வெளியிட, குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றத்தின் தலைவர் இக்னேஷியஸ் பெற்றுக் கொண்டார். ஆசிரியர் ஜோ ஆண்டனி நூலை அறிமுகம் செய்து பேசினார்.
வெனான்சிஸ் எழுதிய படகுக்குத் துடுப்பு பாரமில்லை நூலை புனித அலாய்சியஸ் மேனிலைப் பள்ளி ஆசிரியை பமிலா வெளியிட, முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் செயலர் கனகராஜ் பெற்றுக்கொண்டார் ஆசிரியை மேரி டொரின் நூலை அறிமுகம் செய்து பேசினார்.
சேவியர் மெத்தோடியஸ் எழுதிய ஏன் இப்படி என்ற நூலை திமுக மாநில மீனவரணி இணைச் செயலாளர் பிளாரன்ஸ் வெளியிட, தி.மு.க. மாநகர மகளிரணி தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா பெற்றுக் கொண்டார். வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் ஜாக்சன் நூலை அறிமுகம் செய்து பேசினார்.
முன்னதாக ஆனி இறை வணக்கம் பாடினார். ஆசிரியர் சாக்ரோ வரவேற்றார். புன்னைச் சிறகுகள் வெர்ஜின் நன்றி கூறினார். ஆசிரியர் ஜீடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில், பெஞ்சமின் டி.சூ சா, இன்னாசி, புன்னையம்பதியின் தயாளன், இந்திய மீனவர் சங்கத்தின் ராஜு, குருஸ் பர்னாந்து மக்கள் இயக்கத்தின் ரூஸ்வெல்ட் சமம் குடிமக்கள் அமைப்பின் ஜான் பி.ராயர், நாம் தமிழர் இயக்கத்தின் ஆர்தர் பேட்டர்சன் உள்ளிட்ட கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான நெய்தல் அண்டோ செய்திருந்தார்.
No comments