புதுச்சேரியில் பிரபல உணவகத்தில் வாங்கிய பரோட்டா சால்னாவில் புழு மிதந்ததால் சாப்பிட்ட தட்டுடோடு கடைக்கு வந்து நியாயம் கேட்ட நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
புதுச்சேரியில் காரை செட்டிநாடு நிறுவனத்தின் கிளையாக அண்ணா சாலையில் பிரபலமான மாஸ்டர் கடை என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டில் முத்தியால்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஒரு பரோட்டா 40 ரூபாய் என்று 8 பரோட்டா வாங்கி உள்ளார்.
பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அதில் பெரிய அளவில் புழு ஒன்று மிதந்து கொண்டு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சாப்பிட்டு கொண்டிருந்த தட்டோடு கடைக்கு புறப்பட்டு வந்து கடையிலிருந்த ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் இந்த பரோட்டாவை எனது குழந்தைகள் சாப்பிட்டுள்ளது என்றும், குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று ஆனால் உங்களை சும்மா விடமாட்டேன் தொலைத்து விடுவேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.
No comments