தூத்துக்குடியில் பல்வேறு மகளிர்குழுக்களை சேர்ந்த பெண்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.
தூத்துக்குடியில் பல்வேறு மகளிர் குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடியில் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமை வகித்தார். பெஸி வரவேற்றார்.
இதில், தூத்துக்குடியில் பல்வேறு மகளிர் குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், 200க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். பின்னர் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், தவெக நிர்வாகிகள் ஆனந்தி, ராபின்ஸ்டன், வழக்கறிஞர் ரஸ்சூல், அபர்ணா கிங்ஸ்டன், பெசில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஸ்டெல்லா நன்றி கூறினார்.
No comments