இந்து சமய அறநிலையத்துறை ஆணையருடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை !
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஆணையர் சிவசங்கருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருப்பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலயத்தின் புதிய தேர் செய்யும் பணி எந்த நிலையில் இருக்கிறது என்று கேட்டறிந்த அவர், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணையரை கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, திருக்காமீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி திருக்காமேஸ்வரன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் நவீன், மிலிட்ரி முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments