வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் புதிய தேர் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்பு !
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் திருக்கோவில் திருத்தேரை ஆய்வு செய்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் புதிய தேர் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில் திருக்காமீஸ்வரர் ஆலத்திற்கு புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவிப் பொறியாளர் செல்வராசு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கலைகழக வல்லுநர்கள் குழுவைச் சேர்ந்த பேராசிரியர்கள் டாக்டர் பிரபு, டாக்டர் தினகரன், டாக்டர் முத்தாதி, வனத்துறை இணை இயக்குநர் ராஜாகுமார், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முன்னாள் தேர் கமிட்டி உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை கோவில் நிர்வாக அதிகாரி திருக்காமேஸ்வரன் வறவேற்று பேசினார்.
கூட்டத்தில், புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் ஆலயத்தின் புதிய தேர் செய்யும் பணியின்போது, தேரின் அகலம், உயரம், தற்போதைய தேர் வடிவத்தில் மாற்றங்கள் தேவையா அல்லது உள்ளது உள்ளபடி செய்வதா, திருத்தேர் செய்ய ஸ்தபதியை தேர்வு செய்வது எப்படி, தேருக்கு தேவையான மரங்கள் கொள்முதல் செய்யுமிடம், தேருக்கு தேவையான மரங்களை சம்பந்தப்பட்ட ஆய்வுக்கூடம் மூலம் ஆய்வு செய்வது, தேர் செய்ய தேவையான நிதியை எப்படி திரட்டுவது போன்ற பல்வேறு திட்டங்கள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
No comments