Breaking News

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிட்கோ யாருக்கு சொந்தம் - மல்லுக்கட்டும் இரு ஊராட்சிகள்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியில்  சுமார் 54 ஏக்கரில் 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை (சிட்கோ) அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்படும் சிட்கோ லிங்கம் பட்டி - குலசேகரபுரம் இரு ஊராட்சிகளுக்கு இடையே வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த சிட்கோ தங்களுடைய ஊராட்சிக்கு சொந்தமானது என்று 2 ஊராட்சிகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.சிட்கோ பகுதியில் உரிய அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குலசேகரபுரம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று அதிகாரிகள் அப்பகுதியில் அளவீடு செய்ய வந்ததாக தெரிகிறது. முறையாக எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அளவீடு செய்யக்கூடாது, முறையான உத்தரவு பெற்று அதற்கு பின்னர் அளவீடு செய்ய வேண்டும் என்று  அளவீடு செய்ய லிங்கம்பட்டி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிட்கோ அமைந்துள்ள பகுதி லிங்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வருவதால் தமிழக அரசு அறிவித்த படி சிப்காட் லிங்கம் பட்டி ஊராட்சியில் தான் தொடர வேண்டும் என்று கூறி அப்பகுதியில் இன்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி லிங்கம் பட்டி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் வருவாய் அலுவலர் ‌ ராமமூர்த்தி என்பவர்  பேச்சுவார்த்தை நடத்த வந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் - வருவாய் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக வருவாய் அலுவலரை வெளியேறி படி கூறினார். அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால் கொதிப்படைந்த மக்கள் வருவாய் அலுவலரை வெளியேற சொல்லி  போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முற்றுக்கையிட்டதால் வருவாய் அலுவலரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் க இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

No comments

Copying is disabled on this page!