தேசிய அளவில் நடைப்பெற்ற வலைப்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்று ஊர்திரும்பிய அரசு பள்ளி மாணவர்களை மாலை அணிவித்து, வரவேற்ற ஊர் பொதுமக்கள்.
வாணியம்பாடி அருகே தேசிய அளவில் நடைப்பெற்ற வலைப்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்று ஊர்திரும்பிய அரசு பள்ளி மாணவர்களை மாலை அணிவித்து, வரவேற்ற ஊர் பொதுமக்கள்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 30.09.2024 முதல் 04.10.2024 வரை நடைப்பெற்ற தேசிய அளவிலான 36 ஆவது சப் - ஜூனியர் வளைப்பந்து போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவி வின்சி மற்றும் 9 ஆம் வகுப்பு பயிலும் அன்புச்செல்வன் என்ற ஆகிய இருவரும் தமிழக அணி சார்பில் பங்கேற்று வெற்றிபெற்று தங்க பதக்கத்தை வென்று கோப்பையுடன் இன்று ரயில் மூலம் ஊர் திரும்பிய நிலையில், அவர்களை மாணவர்களின் பெற்றோர் மற்றும் வளையாம்பட்டு கிராம மக்கள் மற்றும் வளைப்பந்து, விளையாட்டு பயிற்சியாளர்கள் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
No comments