மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு வரவேற்பு..
புதுச்சேரிக்கு இன்று (26.10.2024) வருகை புரிந்த மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக மனோகர் லால் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் ந. ரங்கசாமி பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார். முன்னதாக துணைநிலை ஆளுநர் கு. கைலாஷ்நாதன், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், ஆகியோர் மத்திய அமைச்சரை வரவேற்றனர்.
முன்னதாக புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்த மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் , உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், தலைமைச் செயலர் Dr. சரத் சௌகான், இ.ஆ.ப., அரசுச் செயலர் (செய்தி மற்றும் விளம்பரம்) R. கேசவன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன். அ, இ.ஆ.ப., முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா, இ.கா.ப., ஆகியோர் வரவேற்றனர்.
No comments