திருச்செந்தூர் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபயண பக்தர்கள் பூங்காவினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய தார்சாலை, பேவர் பிளாக் சாலை, மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால், உயர்கோபுர மின்விளக்கு, புதிய பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருச்செந்தூர் முருகபெருமானை நடைபயணமாக சென்று வழிபட மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். அப்படி புனித பயணம் செல்லும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்காக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகில் நடைபயண ஓய்விட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
1.6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதியாக சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளது. அதேபோல் குடிதண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பூங்காவினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஓரிரு நாளில் பூங்கா திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments