உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் செங்குறிச்சி ஊராட்சியை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் தீர்மானம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி ஊராட்சியில் 8,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த ஊராட்சியை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைத்து இரண்டு நாளுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது இதற்கு செங்குறிச்சி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி கிராம சபை கூட்டத்தில் கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலையில் அரசு கொடுக்கும் திட்டங்களில் எதுவும் கிடைக்காது என்றும் 100 நாள் வேலை திட்டம் வழங்கப்பட மாட்டார்கள் எனக் கூறிகோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர் இதில் அனைத்து கட்சியைச் சேர்ந்த பிரமுகர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட கிராம மக்கள் பலர் உடனிருந்தனர்.
No comments