வல்லூர் அனல் மின் நிலையத்தில் 20% ஊதிய உயர்வு, உற்பத்தி போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அனல் மின் நிலைய வாயிலில் சிஐடியு தொழிற்சங்கத்தினுடன் இணைந்து ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் எனவும் கடந்த நிதியாண்டில் அனல் மின் நிலைய நிர்வாகம் அதிக லாபத்தை ஈட்டி உள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு உற்பத்தி போனஸ் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் ஒப்பந்த நிறுவனங்களை தவிர்த்து அனல் மின் நிலைய நிர்வாகமே நேரடியாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும், ஒப்பந்ததாரர்களை வெளியேற்றிட வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது. அனல் மின் நிலைய அதிகாரிகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வரும் போராட்டம் போல மிகப் பெரிய போராட்டமாக மாறும் எனவும் தொழிற்சங்கத்தினர் எச்சரித்தனர்.
No comments