வள்ளலார் பிறந்த நாள் விழா மற்றும் ராமலிங்க சுவாமி மடத்தின் 76-ஆம் ஆண்டு விழா முதலியார்பேட்டையில் உள்ள சமரச சித்த சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது
புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் பிறந்த நாள் விழா மற்றும் ராமலிங்க சுவாமி மடத்தின் 76 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. மடத்தின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாமக மாநில செயலாளர் கணபதி, பாஜக மாநில செயலாளர் வெற்றிச்செல்வன், சமரச சுத்த சன்மார்க்க சங்க தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து மாணவி தேஜாஸ்ரீ பரதநாட்டிய நிகழ்ச்சி, சண்முகப்பிரியா- மணிமாறன் தலைமையில் திருவருட்பா வீணை நிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வள்ளலார் பக்தர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments