2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான திருநெல்வேலி வேட்பாளரை அறிவித்தது ஐக்கிய ஜனதா தளம்; ஐக்கிய ஜனதா தளத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் இன்று திருநெல்வேலியில் அறிவிப்பு.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது மாநில தலைவர் மணிநந்தன் தலைமை வகித்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிலை மாவட்ட தலைவர் சோமசுந்தரம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் அதன் நீர் நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும் ஆற்றில் கழிவுநீர் கழிப்பதை தடை செய்ய வேண்டும் நெல்லையப்பர் கோவிலை சுற்றி பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் நிலை மாநகரத்தில் பாதாள சாக்கடை திட்டங்கள் கிடப்பில் கிடப்பதை உடனடியாக விரைவில் நிறைவேற்ற வேண்டும் நெல்லை புதிய சுற்றுச்சாலை புறவழி வெளிவட்ட சாலை திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் இன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
மேலும் விரைவில் தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் மாநாடு திருநெல்வேலியில் நடத்தப்படும் விலைவாசி உயர்வை கண்டித்தும் பூரண மது விளக்கை தமிழகத்தில் அமல்படுத்த கோரியும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் ஆகியவை அறவழியில் நடத்தப்படும் என பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பாளையங்கோட்டையில் படித்த இளைஞர்கள் நிறைய உள்ள நிலையில் அங்கு தொழில்நுட்ப பூங்கா ஒன்றை நிறுவ வேண்டும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில தலைவர் மணி நந்தன் பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டின் தங்களுடைய தேர்தல் நிலைப்பாடு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
மதுவிலக்கு குறித்து பேசுவதற்கு முழு தகுதி உடைய கட்சி ஐக்கிய ஜனதா தளம்தான் என்று குறிப்பிட்ட மணிநந்தன் பீகாரில் முழு மதுவிலக்கு அமலில் இருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்து விட்டதாகவும் லஞ்சம் ஊழல் பெருகி விட்டதாகவும் கவலை தெரிவித்த மணிநந்தன் விரைவில் திமுக ஆட்சியை அகற்றுவதே ஐக்கிய ஜனதா தள கட்சியின் நோக்கமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் சோமசுந்தரம் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக நிறுத்தப்படுவார் என குறிப்பிட்ட மணி நந்தன் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பை தமிழகத்திலேயே முதன் முதலில் வெளியிட்ட கட்சி ஐக்கிய ஜனதா தளம் என பெருமிதத்துடன் தெரிவித்தார். திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என திருநெல்வேலியில் பேசிய ஐக்கிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் மணிநந்தன் குறிப்பிட்டார்.
No comments