மின்னூர் ஏரி கால்வாய் தூர் வாரும் பணி ஒன்றிய குழு தலைவர் ஆய்வு.
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் ஊராட்சி ஒன்றியம் மின்னூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் விண்ணமங்களம் ஏரிக்கு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று கால்வாய் தூர்வரும் பணியினை மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய குழு தலைவர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார் நடைபெற்று வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள், உடன் ஒன்றிய அவைத்தலைவர் ராமமூர்த்தி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஒன்றிய குழு உறுப்பினர் கார்த்திக்ஜவகர் மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி துணை அமைப்பாளர் ஆம்பூர் ஆனந்த் கிளை நிர்வாகிகள் நித்தியானந்தம், ரஜினி, வேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கணபதி சதீஷ் ஊராட்சிசெயலாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments