ரோட்டில் உள்ள களிமண் அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மார்க்கையன்கோட்டை மற்றும் அதனைத் சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணி நிறைவடைந்த நிலையில் களிமண் கட்டி ரோட்டில் படர்ந்த வண்ணம் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு பருவமழை பொழிந்ததால் நெல் அறுவடை செய்ய இயந்திரம் மற்றும் ட்ராக்டர் அதிகமாக சாலைக்கு வந்து சென்றதால் நெல் அறுக்கும் ரோலர் இயந்திரத்தில் இருந்து களிமண் சாலையில் கொட்டியதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் சாலையில் செல்லும் போது விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த சாலை முழுவதும் நெல் அறுவடை செய்யும் காலங்களில் நெல் எடை போடுவதற்காக குவிக்கப்பட்டு வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு வருவதாலும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகிறது, இதனால் இரவில் வரும் வாகனங்கள் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் மிகவும் சிரமத்திற்க்குள்ளாகி உள்ளது குடும்பத்துடன் வருபவர்கள் குழந்தைகளுடன் கீழே விழுந்து செல்கின்றனர் இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை மிக துரிய நடவடிக்கை எடுத்து இந்த களிமண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments