Breaking News

வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலை மக்களுக்கு விரைவில் இருசக்கர ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி வருகை தந்தார்  அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது தமிழகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிக்காக மக்கள் சென்று வர மிகவும் சிரமம் இருப்பதால் மலைவாழ் மக்களுக்கு இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் சேவை வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் என்றும் நவம்பர் 8 ம் தேதி ஜவ்வாது மலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு அவருடன் தானும் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்படும், மலைவாழ் மக்களின் வசதிக்காக நிதிநிலை அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தது போல மலைவாழ் மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக இந்த இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படுகிறது. 

மேலும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரியில் பல கோடி ரூபாய் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது அந்த மருத்துவமனைகளில் இறுதி கட்ட மருத்துவ சாதனங்கள் பொருத்தப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது குடியாத்தம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அங்கு பணிகள் நிறைவு பெறும்.

இந்த மருத்துவமனை கட்டிடங்கள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் அதேபோல் வேலூர் மாவட்டத்தில்  தலா 1 கோடி 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது, குடியாத்தம் அடுத்த கூட நகரம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள் அடுத்த ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் கூட நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 1021 மருத்துவர்களும்  977 செவிலியர்களும் 946 மருந்தாளர்களும் 526 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் படிப்படியாக காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!