தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி வாழ்த்து.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும். மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், தூத்துக்குடி மத்திய ஓன்றிய திமுக சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மூத்த தொண்டர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கும் நிகழ்ச்சி மத்திய ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், ஓன்றிய துணைச்செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், ஏஞ்சலின் ஜெனிட்டா, பொருளாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், வெயில்ராஜ், ஒன்றிய வழக்கறிஞர் அணி மகேந்திரன், மாவட்ட சிறுபான்மை அணித்தலைவர் ராஜா ஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர் பாலசுந்தரம், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், மீனாட்சி, வழக்கறிஞர் அணி மகேந்திரன், தொழிலாளர் அணி மொபட் ராஜன், தொண்டரணி துணைஅமைப்பாளர் சைமன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வின், இளைஞரணி துணை அமைப்பார் ஜோசுவா மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments