சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..
புதுச்சேரியில் கன மழை எச்சரிக்கை காரணமாக கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா்.
புதுச்சேரி, காரைக்காலுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.மேலும்கடற்கரைப் பகுதிகளில் மீனவப் படகுகள் பத்திரமாக கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
மேலும், ராக் கடற்கரை,ஈடன் கடற்கரை, பாரடைஸ் கடற்கரை போன்ற முக்கிய கடற்கரைகள் மற்றும் புதுச்சேரி கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் அனுமதிக்கவில்லை. ஒலிபெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த வண்ணம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
No comments