Breaking News

நில மோசடிகளை அடையாளம் கண்டு வெளிக் கொண்டு வர அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் ஆலோசனை..

 



காரைக்கால், கோவில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த நிலமோசடி விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், மாவட்ட முதன்மை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் ஆகியோரின் நேரடி பார்வையில் முதல்நிலை விசாரணை நடைபெற்றது. 

அதன் அடிப்படையில் மோசடியில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத் துணை ஆட்சியர் (வருவாய்) ஜான்சன், துணை சர்வேயர் ரேணுகாதேவி மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நில மோசடி விவகாரம் புதுச்சேரி மாநிலத்திற்கும் அரசு நிர்வாகத்திற்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் இந்த வழக்கு விசாரணையையும் அதன் விவரங்களையும் துணைநிலை ஆளுநர் கூர்ந்து கவனித்து வருகிறார். 

 விசாரணையைில் எவ்வித தவறும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி விவகாரம் மட்டுமல்லாமல் இது போன்ற எத்தகைய கோயில் நில மோசடிகளையும் பொறுத்துக் கொள்ள முடியாது.

 அதன் அடிப்படையில், கோயில் நிலமோசடிகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு மோசடியில் ஈடுபட்டு நபர்களை அடையாளம் காண வேண்டும். 

அத்தகைய கோயில் நிலங்கள் உடனடியாக மீட்டு மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 அதுமட்டுமல்லாமல், கோயில் சொத்துக்கள் சம்பந்தமாக முறையான கணக்கெடுக்கும் அவற்றை முறையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். 

 இது போன்ற விவகாரங்கள் இனியும் நடக்காமல் இருப்பதற்கு வருவாய்த்துறை, நில அளவைத்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை, அறநிலையத்துறை போன்றவை கூடுதல் கண்காணிப்போடு செயல்பட வேண்டும். இது போன்ற நில மோசடிகளை அடையாளம் கண்டு வெளிக் கொண்டு வரவும் மக்களிடையே இவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments

Copying is disabled on this page!