அரசின் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திருபுவனை போலிசார் திடீர் சோதனை..
புதுச்சேரியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றனர்.
இந்த திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன்,சப் இன்ஸ்பெக்டர் குமரவேலு, புதுச்சேரி புகையிலை தடுப்பு கட்டுப்பாட்டு மைய அதிகாரி டாக்டர் சூரிய குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, கூல்லிப், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் சோதனை செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் நீதித்துறை மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
No comments