Breaking News

மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்கிய திருக்கடையூர் நல்ல தண்ணீர் கிணறு. பயனற்று புதர்களின் நடுவே புதைந்து கிடக்கும் அவலம்.சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

 



   மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை முதல் தரங்கம்பாடி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரயில் சேவை துவங்கப்பட்டது.அப்போது நீராவியில் இயங்கும் இரயியிலின் தண்ணீர் தேவைக்காக திருக்கடையூர் இரயில் நிலையம் அருகே பெரிய கிணறு அமைக்கபட்டது. இக்கிணற்றில் தண்ணீர் சுவையாகவும் சுத்தமாகவும் இருந்ததால் இக்கிணற்றை நல்ல தண்ணீர் கிணறு என்றே அழைத்தனர் அப்பகுதி மக்கள். மயிலாடுதுறையில் இருந்து வரும் இரயில் திருக்கடையூர் இரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பி கொண்டு தரங்கம்பாடி செல்வது வழக்கம்.கடலோர கிராமமான தரங்கம்பாடியில் அப்போதைய காலகட்டத்தில் போதிய குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்த நிலையில் இரயிலின் தேவைக்கு போக எஞ்சிய தண்ணீரை தரங்கம்பாடி மக்களுக்கு குடிநீராக வழங்கியுள்ளனர். நாளடைவில் மீனவ மக்களின் குடிநீருக்காகவே நல்ல தண்ணீர் கிணற்றில் இருந்து இரயிலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கபட்டுள்ளது.1986 ஆம் ஆண்டு இரயில் நிறுத்தபட்டவுடன் நல்ல தண்ணீர் கிணறும் போதிய பராமரிப்பு இல்லாமல் பயனற்று தற்போது வரை புதர்களுக்கு நடுவே மறைந்து கிடக்கிறது. கிணற்றின் உள்ளே பெரிய ஆலமரமே வளர்ந்துள்ள நிலையில் இன்றும் 6 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்காண மக்களுக்கு குடிநீர் வழங்கிய நல்ல தண்ணீர் கிணறு அந்த சுவடுகளோடு இன்று கழிவுகள் மற்றும் குப்பைகளை சுமந்து புதர்களின் நடுவே புதைந்து கிடக்கிறது. 



தற்போது மீண்டும் மயிலாடுதுறை - தரங்கம்பாடி இரயில் சேவை துவங்க ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பழைமை வாய்ந்த திருக்கடையூர் நல்ல தண்ணீர் கிணற்றை தூர்வாரி சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!