தூத்துக்குடியில் சமக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாலை அணிவித்து மரியாதை!
தூத்துக்குடியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சமுத்துவ மக்கள் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் அக்கட்சியினர் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு சமத்துவ மக்கள் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல்ராஜ், சமத்துவ மக்கள் கழக மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசைமுத்து, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு.முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துச்செல்வம், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாநகரச் செயலாளர் உதயசூரியன், செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜேசு செல்வி சந்திரா, ராதாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments