Breaking News

பஞ்ச நரசிம்ம ஆலயங்களில் ஒன்றான திருவாலி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு :-

 


மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டை அடுத்த திருவாலியில் ஸ்ரீ அமிர்தகடவல்லி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. திருவெண்காடு, மங்கைமடம் பகுதிகளில் அமைந்துள்ள பஞ்ச நரசிம்ம ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். லஷ்மி தேவியை நரசிம்ம பெருமாள் மடியில் அமர்த்தியபடி சாந்த சுரூபமாக காட்சியளிப்பதால் இங்கு வழிபடும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாகும். புகழ் பெற்ற இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னெடுப்பில் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு கொண்டுவரப்பட்டு மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தாயாருடன் பெருமாள் ஆலயத்தில் உள்பிரகார வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

No comments

Copying is disabled on this page!