பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற 100-கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் "பாவேந்தர் கலை இலக்கிய திங்கள் விழா" பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் இன்று நடைபெற்றது.
"புரட்சிக் கவிஞரும் முடியரசனாரும்" என்ற தலைப்பிலான 71வது நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலர் வள்ளி, இசை சுடர் கிருஷ்ணகுமார், படைப்பாளி ரமேஷ் பைரவி, மதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பட்டிமன்ற நடுவர் உமா என்கிற அமுலோற்பவமேரி "விடுதலை வீரர்கள்" என்ற தலைப்பில் திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா ஆகியோர் பிறந்த நாள் சிறப்புரை ஆற்றினார்.
மேலும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments