ஆந்திரா, தெலுங்கானா போன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு.
கயத்தாரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில் தொண்டனை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி தொடங்கியவர் எம்.ஜூ.ஆர், சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ஆர். ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர், இப்பவும் ஆரம்பிக்கின்றனர்.
ஆனால் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பித்து கட்சியாக தொடங்கிய அதிமுக மட்டுமே ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் படுத்துக் கொண்டே தானும் வெற்றி பெற்று, கட்சியையும் வெற்றி பெற வைத்தவர் எம்.ஜூ.ஆர் அதிமுக கப்பல் போன்றது. சூறாவளி வந்ததும் லேசா நடுக்கம் இருக்கும் அப்போது குதிக்க வேண்டாம், படகில் போக வேண்டாம். அவர்களால் கரை சேர முடியாது. அதிமுக என்ற கப்பல் கரை சேரும் அதிமுக 2026ல் ஆட்சி அமைக்கும் மழை வரும் வரை சூரியன் பிரகாசமாக இருக்கும். மேகம் வந்ததும் சூரியன் மறைந்து விடும்.
அது போல தான் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் ஆந்திரா, தெலுங்கானா போன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும் அதிமுகவினர் கட்சி வேஷ்டியை சலவை செய்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் ரூ2000 வாங்கி கொடுத்து விடுவோம் போன மச்சான் திரும்பி வந்தது போல திமுக ஆட்சியில் போன திட்டங்கள் அதிமுக ஆட்சி வந்ததும் வந்துவிடும் என்றார்.
No comments