Breaking News

ஏரியில் அரசு அனுமதி பெற்று மண் அள்ளிய டிப்பர் லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை முற்றுகையிட்டு பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுப்பணி துறைக்கு சொந்தமான பெரிய ஏரியில் அரசு அனுமதி பெற்று மண் அள்ளிய டிப்பர் லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை முற்றுகையிட்டு பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, இது பற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் செய்ததோடு ஹிட்டாச்சி வாகனங்கள் மற்றும் டிப்பர் லாரிகளை மண் அல்லாமல் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரியில் ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் ஏரி மண் வெட்டி எடுக்கப்பட்டு டிப்பர் லாரிகள் மூலம் ஏற்றி செல்லப்பட்டு வருவதாக தகவல் வெளியானது இந்த நிலையில் அதே ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியிலிருந்து அதிக அளவில் மண்வெட்டி எடுத்துச் செல்லப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் எனவும் வருங்காலத்தில் கால்நடைகள் பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதோடு அதிக அளவில் ஆழமாக வெட்டி மண் எடுத்து வருவதால் அங்கு குளிக்க செல்லும் மாணவர்கள் ஏரியில் உள்ள நீரில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாகவும் கூறி புல்லூர் பெரிய ஏரியில் ராட்சத இயந்திரம் மூலம் மண்வெட்டி எடுக்க தடுக்கவும் டிப்பர் லாரிகளை மறித்தும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது மேலும் கிராம மக்களின் போராட்டத்தால் லாரி ஓட்டுநர்கள் மண்கலை ஏற்றுக் கொண்டு ஏரியில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது இது பற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் அப்பொழுது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று புல்லூர் பெரிய ஏரியில் மண் எடுக்கக் கூடாது என கூறி அங்கிருந்த ஹிட்டாச்சி இயந்திரம் மற்றும் லாரிகளை அப்புறப்படுத்தினர் இதனால் அங்கு சுமுகமான சூழல் ஏற்பட்டது காவல்துறையினரின் இந்த நடவடிக்கை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments

Copying is disabled on this page!