Breaking News

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி,100கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் முதல்வர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 


புதுச்சேரியில், பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், பால சேவிகா பணியாளர்கள் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணியளவில், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 288 பேர் முதல்வர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர். அப்போது, அப்பா பைத்தியசாமி கோவிலில், முதல்வர் பூஜை செய்து கொண்டிருந்தார்.

கோவிலுக்கு சென்ற ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து, நாங்கள் 5 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.கடந்த 10 ஆண்டுகளாக, ஒப்பந்த அடிப்படையில், பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.அதனால், பணி நிரந்தரம் செய்ய முடியாது என முதல்வர் அவர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து முதல்வர் காரில் புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி தகவலறிந்து வந்த கோரிமேடு போலீசார், போராட்டம் நடத்த வந்த ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.அடை மழையையும், பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்த வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Copying is disabled on this page!