தன்னையும் தனது குடும்பத்தினரையும் தாக்கியதாக காவலர் மீது புகார் அளித்த மனைவி.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த ஜினோஸ்லின் (26). இவரை அதே பகுதியை சேர்ந்த காவலர் ஜாக்சன்(28) கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதன்பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஜினோஸ்லின் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குதிவு செய்து ஜாக்சனை கைது செய்தனர். இதனையடுத்து ஜாக்சன் ஜினோஸ்லினை கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனால் ஜாக்சன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ஜினோஸ்லின் திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் திடீரென காதல் மனைவி ஜினோஸ்லினிடம் பேசுவதை நிறுத்திக் கொண்ட ஜாக்சன் மனைவியுடன் இல்லாமல் தனியாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் விவாகரத்து செய்வதற்கு மனைவி ஜினோஸ்லினுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஜாக்சன் அவரது வீட்டில் அருகில் உள்ள ஒரு பெண்ணிடம் பேசி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஜாக்சன் அந்தப் பெண்ணிடம் தொடர்பு இருப்பதை பார்த்த ஜினோசிலின் அந்தப் பெண்ணிடம் ஜாக்சன் பற்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜாக்சன், மற்றும் அவரது அண்ணன் தம்பி தாயார் ஜீனோசிலின் வீட்டிற்கு சென்று ஜினோசின் மற்றும் அவரது தந்தை தம்பி தாயாரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த ஜினோசிலின் குடும்பத்தினர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட் பெண் ஜீனோசிலின் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001
No comments