கடலூர் மாவட்டத்தில் தொடரும் அவலம், சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாமல் அவதிக்குள்ளாகும் கிராம மக்கள்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீ புத்தூர் ஊராட்சி அம்புஜவல்லி பேட்டை காலனி தெருவில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில் தெருநருகே சுடுகாடு செல்லும் சாலை குறைவான மழை வந்தாலே சுமார் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கும் கடந்த ஆறு மாத காலமாக வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை தமிழகத்தில் பருவ மழை தொடங்கி முன்கூட்டியே அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆனால் ஸ்ரீபுத்தூர் ஊராட்சியை கண்டு கொள்ளாத வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அதோடு இந்த சாலை குடியிருப்பு மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் உரம் பூரியா போன்றவற்றை வயல்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கம் இதனை கண்டு கொள்ளாதது ஏன் அதோடு பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்ததற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பல்வேறு சாக்குப் போக்குகளை சொன்னது குறிப்பிடத்தக்கது.
No comments