Breaking News

தலைமை ஆசிரியரை பாராட்டிய ஆசிரியர் கூட்டமைப்பினர்.


வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கரிகிரி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கே. பழனி பதவி உயர்வு பெற்றதற்கு ஆசிரியர் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கரிகிரி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி பதவி உயர்வின் மூலம் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக செல்லும் கே. பழனி அவர்களை இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் முனைவர் செ. நா. ஜனார்த்தனன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். எஸ். சிவவடிவு ஆகியோர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!