Breaking News

ஆர்.கே.பேட்டை அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் 32 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் 32 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை, பெரியராமாபுரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் என்பவரின் மகன் பி.ஸ்டான்லி இவர் ஜம்மு காஷ்மீர் மாவட்டம் லடாக் பகுதியில் நாய்க் சுபேதார்  வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி லடாக் பகுதியில் ஸ்டான்லி பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான பெரியராமாபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்டான்லி குடும்பத்தினருக்கு ஆட்சியர் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கிராமமக்கள் மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து  ஸ்டான்லி உடலுக்கு, பெங்களூருவில் இருந்து வந்திருந்த ராணுவ வீரர்கள் குழுவினர் மரியாதை செய்தனர். பின்னர் அவரது உடல்  மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 32 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

No comments

Copying is disabled on this page!